உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

நிலக்கோட்டையில் கிடப்பில் போடப்பட்ட சார்பு நீதிமன்ற திட்டப்பணி - பொதுமக்கள் அவதி

Published On 2023-08-09 10:43 IST   |   Update On 2023-08-09 10:43:00 IST
  • 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிலக்கோட்டையில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என வக்கீல்கள், சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
  • திரவியம் நகர் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை அதிகாரிகள் ஒதுக்கி கொடுத்து ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் ஏதும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டு ள்ளது.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டையில் நடுவர் நீதிமன்றம் சுதந்திரம் பெறுவதற்கு முன்பே அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கடந்த 1992-ம் ஆண்டு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உருவாக்க ப்பட்டது. நிலக்கோட்டை தாலுகாவில் 40 ஊராட்சி கள், 5 பேரூராட்சிகள் உள்ளது. இதில் ரெங்கப்ப நாயக்கன்பட்டி ஊராட்சியில் இருந்து நிலக்கோட்டை வரை சுமார் 30 கி.மீ பயணிக்க வேண்டும்.

மேலும் ரூ.1 லட்சத்திற்கு அதிகமாக வழக்குகள் திண்டுக்கல் சார்பு நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலை உள்ளது. இதனால் அங்கு பயணிக்க சுமார் 60 கி.மீ செல்ல வேண்டும். எனவே கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பிரு ந்தே நிலக்கோட்டையில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என வக்கீல்கள், சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனைதொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நிலக்கோட்டையில் சார்பு நீதிமன்றம் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.

இதற்காக திரவியம் நகர் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை அதிகாரிகள் ஒதுக்கி கொடுத்து ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதன்பின்னர் பணிகள் ஏதும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டு ள்ளது. இதனால் பொது மக்கள் நீண்டதூரம் பயணி க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நிலக்கோட்டை தாலுகா அலுவலக பழைய கட்டிட த்தில் சார்பு நீதிமன்றம் தற்காலிகமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கிடப்பில் போடப்பட்ட திட்டத்தை விரைவில் முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News