உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2022-12-05 14:41 IST   |   Update On 2022-12-05 14:41:00 IST
  • மாரியம்மன் கோவில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • சீர்காழி- மயிலாடுதுறை சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சீர்காழி:

சீர்காழி அருகே கதிராமங்கலம் முதல் மயிலாடுதுறை வரை சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இதையொட்டி சாலையின் இரு புறங்களிலும் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியால் சாலை ஓரம் உள்ள குடியிருப்புகள் பாதிக்கப்படுவதாக கூறி பொதுமக்கள் மயிலாடுதுறை சாலை திருநன்றியூர் மாரியம்மன் கோவில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு பா.ம.க. மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிசாமி தலைமை தாங்கினார்.

அப்போது குடியிருப்பு வாசிகளுக்கு இடையூறாக அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், அமைக்கப்பட்ட வடிகாலை அப்புறப்படுத்தக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் புயல் பாலச்சந்திரன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

இந்த போராட்டத்தால் சீர்காழி- மயிலாடுதுறை சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News