பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட காட்சி.
அரசு நிலம் ஆக்கிரமிப்பு தாரமங்கலத்தில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
- விவசாய நிலத்திற்கு அருகில் அரசுக்கு சொந்த மான 2 சென்ட் நிலம் உள்ளது.
- பொது மக்கள் தேவைக்காக குடிநீர் தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள ராமிரெட்டிபட்டி கிராமம் ஆயாமரம் பகுதியை சேர்ந்த வர் சின்னத்தம்பி (வயது 54). இவரது விவசாய நிலத்திற்கு அருகில் அரசுக்கு சொந்த மான 2 சென்ட் நிலம் உள்ளது.
இந்த நிலத்தில் தற்போது ஊராட்சி ஒன்றிய ஆணையாளரின் உத்தரவின் பேரில் பொது மக்கள் தேவைக்காக குடிநீர் தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அந்த இடத்தில் குடிநீர் தொட்டி அமைக்க கூடாது என்று கூறி சின்னத்தம்பி குடும்பத்தி னர் கம்பி அமைத்து விட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு வந்து நேற்று தாரமங்கலத்தில் இருந்து ஜலகண்டபுரம் செல்லும் சாலையில் ஆயாமரம் பகுதியில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அப்போது இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தார மங்கலம் போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணை யாளர்கள் விஜயலட்சுமி, ரவிசந்திரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.பின்னர் பொதுமக்கள் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் மறியலில் ஈடுபட்ட 45 பேரை போலீசார் கைது செய்து தாரமங்கலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
அதனை தொடர்ந்து அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்ததால் ஆணையாளர் விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சின்னத்தம்பி,விஜயா, கார்த்தி,குருநாதசாமி, பெரியம்மாள்,ராஜி, தங்கவேல்,சரோஜா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.