உள்ளூர் செய்திகள்

குற்றாலம் அருவிக்கரையில் தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு குற்றால அருவிக்கரையில் குவிந்த பொதுமக்கள்- முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்

Published On 2023-07-17 08:27 GMT   |   Update On 2023-07-17 08:27 GMT
  • அமாவாசை நாட்களில் இந்துக்கள் ஆறு உள்ளிட்ட நீர்நிலைப் பகுதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.
  • அமாவாசை நாளான இன்று பலர் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

தென்காசி:

தமிழகத்தில் அமாவாசை நாட்களில், இறந்த தங்களின் முன்னோர்கள், உறவினர்கள் நினைவாக கடற்கரை, ஆறு மற்றும் அருவிக்கரை உள்ளிட்ட நீர்நிலைப் பகுதிகளில் தர்ப்பணம் கொடுத்து இந்துக்கள் வழிபடுவது வழக்கம். இதில் ஆடி மாதம் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்று ஆடி மாதம் பிறந்ததை ஒட்டி அமாவாசை நாளும் இன்றே வருவதால் பலர் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

குற்றாலத்தில் உள்ள மெயின் அருவிக்கரை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காலை முதல் அர்ச்சகர்கள் முன்னிலையில் பலர் தர்ப்பணம் செய்து குற்றாலநாதர் கோவில் மற்றும் சன்னதி பகுதிகளில் உள்ள தெய்வங்களை வழிபட்டனர்.

Tags:    

Similar News