கோப்பு படம்.
பழனி பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சம்
- கடந்த 10 நாட்களில் 29 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 13 பேருக்கு தொற்று உறுதியானது.
- காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி தென்பட்டால் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
பழனி:
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரு கிறது. தமிழகத்திலும் இதேநிலை ஏற்பட்டுள்ள தால் ஆஸ்பத்திரிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தடுப்பு, சிகிச்சைகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட த்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. 26 பேர் வரை பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் குணமடைந்துள்ளார். பழனி பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வரு கிறது. கடந்த 10 நாட்களில் 29 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ப்பட்டதில் 13 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் 2 பேர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். மற்றவர்கள் வீடுகளி லேயே தனிமைப்படுத்தி கொண்டனர். ஆயக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு தினசரி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் அதில் ஒருவருக்காவது கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவதால் பழனி மற்றும் ஆயக்குடி பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். பழனி அரசு ஆஸ்பத்திரியில் கட்டிட பணிகள் நடை பெற்று வருவதால் கொரோ னாவுக்கான சிறப்பு வார்டு ஏற்படுத்தப்படவில்லை.
பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அச்சப்பட தேவையில்லை. முககவசம் மற்றும் கைகளை நன்றாக கழுவுதல் உள்ளிட்ட முறைகளை பின்பற்ற வேண்டும். மேலும் காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி தென்பட்டால் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். டாக்டர் பரிந்துரையின்றி மருந்து கடைகளில் மருந்து வாங்கி பயன்படுத்த கூடாது.
மேலும் கொரோனா தடுப்பு முறைகளை விழிப்புணர்வுடன் பின்பற்ற வேண்டும் என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்