அரும்பட்டு கிராமத்தில் பயனாளிகளிடம் கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் குறைகளை கேட்டறிந்த காட்சி.
பிரதமரின் குடியிருப்பு திட்டத்தில் வழங்கப்பட்டவீடுகளை விரைவில் கட்டி முடிக்க வேண்டும்:பயனாளிகளுக்கு கூடுதல் கலெக்டர் அறிவுரை
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்தில் பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் 2016-22 வரை வழங்கப் பட்ட 2862 வீடுகளை கட்டி முடிக்காதவர்களுக்கு ஆலங் குப்பம் சமுதாயக் கூடத்திலும், ஏனாதிமங்க லம் ஊராட்சி சேவைமைய கட்டிடத்திலும், அரும் பட்டு சமத்துபுரம் சமுதாயக் கூடத்திலும், மணக்குப்பம் விஜய் திருமணமண்ட பத்தி லும் அண்டராய நல்லூர் அஞ்சுகம் திருமண மண்ட பத்திலும் முகாம் நடை பெற்றது.
அரும்பட்டு கிராமத்தில் நடைபெற்ற முகாமில் விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் கலந்து கொண்டு பயனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் சிமெண்ட் கம்பி பணம் முறையாக வழங்கப்படுகின்றதா எனவும் வீடு கட்டுவதற்கு சிரமங்கள் இருந்தால் தீர்ப்பதாகவும் வருகிற 31.12. 2023-க்குள் வீடுகளை கட்டி முடிக்க வேண்டும் எனவும் வீடுகளை கட்டி முடிப்பவர்கள் வீடுகளுக்கு தான் வருவதாகவும் கூறினார்.அவருடன் திருவெண்ணைநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் (வட்டார ஊராட்சி) கேசவலு (வட்டார ஊராட்சி) விஜயபாலன்(கிராம ஊராட்சி), துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தர் ராஜன், ஒன்றிய பொறி யாளர் ரங்கபாஷியம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.