உள்ளூர் செய்திகள்

ஓசூரில் ஒன்றிய அனைத்து ஆசிரியர் சங்கங்களின் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்

Published On 2023-10-06 15:28 IST   |   Update On 2023-10-06 15:28:00 IST
  • ஓசூரில் அனைத்து ஆசிரியர் சங்கங்களின் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்பாட்டம் நடைபெற்றது.
  • 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், ஓசூர் ஒன்றிய அனைத்து ஆசிரியர் சங்கங்களின் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஓசூரில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் பவுன்துரை தலைமை தாங்கினார். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு உறுப்பினர் கோபி வரவேற்றார். இதில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் வட்டார தலைவர் பிரசாத், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில செயலாளர் தசரத ராமிரெட்டி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின்.வட்டார செயலாளர் ஜனார்த்தனா, தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் மற்றும் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்ட ணியின் முன்னாள் வட்டார செயலாளர் நாகராஜன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டின்போது, இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண் டும் என்று கோரிக்கை விடுத்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில், 200-க்கும் மேற்பட்ட ஓசூர் ஒன்றிய அனைத்து ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் வட்டார தலைவர் நாக பிரசாத் நன்றி கூறினார்.

Tags:    

Similar News