உள்ளூர் செய்திகள்

ஓசூரில் மத்தியஅரசுக்கு ஓய்வூதியர்கள் தபால் அனுப்பும் போராட்டம்

Published On 2023-05-31 10:14 GMT   |   Update On 2023-05-31 10:14 GMT
  • ஓய்வூதியர்கள் அனைவருக்கும் குறைந்த பட்சம் பஞ்சப்படியுடன் ரூபாய் 9 ஆயிரம் வழங்க வேண்டும்.
  • இடைக்கால நிவாரணமாக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்.

ஓசூர்,

சென்னை ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் ஓசூர் கிளை சார்பில் இபிஎப் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு தபால் கார்டு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. ஓசூர் எம்.ஜி ரோட்டில் உள்ள தபால் நிலையத்தின் முன்பு சங்க தலைவர் பன்னீர்செல்வம் தலைமையிலும் செயலாளர் சுகுமாரன் முன்னிலையிலும் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், இபிஎப் பென்ஷன் பெறும் ஓய்வூதியர்கள் அனைவருக்கும் குறைந்த பட்சம் பஞ்சப்படியுடன் ரூபாய் 9 ஆயிரம் வழங்க வேண்டும். அதுவரை இடைக்கால நிவாரணமாக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும் இபிஎப் பென்ஷன் பெறும் ஓய்வூதியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இஎஸ்ஐ திட்டத்தை செயல் படுத்த வேண்டும்.

மூத்த குடிமக்களுக்கு 40 சதவீத ரயில் கட்டண திரும்ப சலுகையை வழங்க வேண்டும், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி முழு ஊதியத்திற்கான ஒய்வு ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு தபால்கார்டு அனுப்பப்பட்டது.

.இந்த ஆர்பாட்டாத்தில் தனியார் நிறுவனங்களின் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News