தருமபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தவர்களை படத்தில் காணலாம்.
மதுபானக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தருமபுரி கலெக்டரிடம் பெண்கள் மனு
- மதுபானக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
- மதுபான கடை திறப்பதற்கான பணிகள் நடந்து வருவதாக தெரிகிறது
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே தோமலஅள்ளி கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மதுபான கடை செயல்பட்டு வந்துள்ளது. இதனை மூட வலியுறுத்தி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இதனால் அந்த அரசு மதுபான கடை மூடப்பட்டுள்ளது. இந்நிலை யில் தற்போது மூடப்பட்ட இடத்திற்கு அருகே மீண்டும் அரசு மதுபான கடை திறப்பதற்கான பணிகள் நடந்து வருவதாக தெரிகிறது.
அந்த இடத்தில் மீண்டும் அரசு மதுபானக் கடை திறக்க கூடாது என கூறி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கடை திறந்தால், வெளியூர் பகுதியில் இருந்து ஏராளமானோர் மது அருந்த வருவார்கள், இதனால் அதிகமான வாகன போக்குவரத்து ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் என கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.
இந்த நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு தோமலஅள்ளி கிராமத்தை சேர்ந்த 50 பெண்கள் தருமபுரி கலெக்டர் அலுவலகம் வந்தனர். அப்போது கலெக்டரிடம் மதுக்கடை திறக்க கூடாது என்று கோரிக்கையை வைத்து மனுவை அளித்தனர்.