உள்ளூர் செய்திகள்

தருமபுரி நகரில் ரூ.2 கோடி மதிப்பில் திட்ட பணிகள்

Published On 2023-05-13 09:07 GMT   |   Update On 2023-05-13 09:07 GMT
  • பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் உள்ள குறைபாடுகள் குறித்து பேசினார்கள்.
  • கவுன்சி லர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்

தருமபுரி,

தருமபுரி நகராட்சி கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். நகராட்சி துணைத் தலைவர் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் அண்ணாமலை என்கிற புவனேஸ்வரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் அனைத்து கட்சி கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் 36 பொருட்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் தருமபுரி நகரில் தார் சாலை மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட 8 திட்டப்பணிகள் ரூ.2 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் ராஜாதி ரவி பேசுகையில், நகராட்சி கவுன்சிலர்களின் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளுக்கு சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களை அழைக்காமல் விழா நடத்துகிறார்கள்.

அந்தந்த பகுதியில் நடைபெறும் விழாக்களுக்கு நகராட்சி கவுன்சிலர்களை முறையாக அழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

இதேபோன்று பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் உள்ள குறைபாடுகள் குறித்து பேசினார்கள். கவுன்சி லர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி தலைவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் நகராட்சி மேலாளர் சண்முகம், கணக்கு அலுவலர் முத்துக்குமார், நகராட்சி உதவி பொறியாளர் சரவணகுமார், வருவாய் ஆய்வாளர் மாதையன், நகராட்சி சுகாதார அலுவலர் ராஜரத்தினம், துப்புரவு ஆய்வாளர்கள் சுசீந்திரன், கோவிந்தராஜன், சீனிவாசலு மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News