உள்ளூர் செய்திகள்

வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு

Published On 2023-02-13 14:27 IST   |   Update On 2023-02-13 14:27:00 IST
  • 4-ம் வகுப்பு மாணவி ரித்திகா வரவேற்புரை வாசித்தார்.
  • மழலையரின் அலங்கார அணிவகுப்பு அனைவரையும் கவர்ந்தது.

தஞ்சாவூர்:

கும்பகோணம் தாமரை பன்னாட்டு பள்ளியில் மழலையர் பிரிவு மாணவர்களின் 7-ம் ஆண்டு விளையாட்டு விழா கடந்த 10-ந்தேதி நடைபெற்றது.

விழாவை பள்ளி தலைவர் வெங்கடேசன், துணைத்தலைவர் நிர்மலா வெங்கடேசன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

விழாவில் தஞ்சை தாமரை பன்னாட்டு பள்ளியின் முதுநிலை முதல்வர் ஜெயஸ்ரீ பத்ரிநாத் மற்றும் கும்பகோணம் தாமரை பன்னாட்டு பள்ளியின் முதல்வர் விஜயா ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

4-ம் வகுப்பு மாணவி ரித்திகா வரவேற்புரை வாசித்தார்.இதில் பெற்றோர்கள், மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மழலையர் பிரிவு மாணவர்கள் சிலம்பம், கராத்தே, யோகா போன்றவற்றில் தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும், விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றனர்.

மழலையரின் அலங்கார அணிவகுப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. பெற்றோர்களுக்கான விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

விழா பள்ளி முதல்வர் மற்றும் அவர்களது குழு ஆசிரியர்கள் மூலம் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டு நடைபெற்றது. முடிவில் 4-ம் வகுப்பு மாணவி ஸ்மித்திகா நன்றி கூறினார்.

Tags:    

Similar News