சிறப்பாக செயல்பட்ட வங்கிகளுக்கு பரிசுதொகை சான்றிதழ்கள்
- தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சிற்பாக பணியாற்றிய உதவி திட்ட அலுவலர்கள், அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.
- மொத்தம் ரூ. 30 ஆயிரம் பரிசுத்தொகை, கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வங்கியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். கூட்டத்தில், மாநில தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட மேலாண்மை அலகு சார்பாக 2021-22 ம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட முதல் விருது இந்தியன், இரண்டாம் விருது பெற்ற தமிழ்நாடு கிராம வங்கிக்கும் கேடயம் மற்றும் வங்கி சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
இதே போல், கிளை வங்கிகளில் முதல் விருது பெற்ற கிருஷ்ணகிரி கிளை தமிழ்நாடு கிராமத்திற்கு ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பரிசுத்தொகை, இரண்டாம் விருது பெற்ற காவேரிப்பட்டணம் இந்திய வங்கிக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பரிசுத்தொகை, மூன்றாம் விருது பெற்ற குந்தாரப்பள்ளி கிளை இந்தியன் வங்கிக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பிலான பரிசுத்தொகை என மொத்தம் ரூ. 30 ஆயிரம் பரிசுத்தொகை, கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சிற்பாக பணியாற்றிய உதவி திட்ட அலுவலர்கள், அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.
இந்த கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் ஜாகீர்உசேன், இந்தியன் வங்கி மண்டல துணை பொது மேலாளர் பத்மாவதி ஸ்ரீகாந்த், இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் மகேந்திரன், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் பிரசன்ன பாலமுருகன், உதவி திட்ட அலுவலர்கள் பிரபாகர், இளங்கோ, பெருமாள் மற்றும் அனைத்து வங்கியாளர்கள் கலந்துகொண்டனர்.