உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

Published On 2023-06-14 15:04 IST   |   Update On 2023-06-14 15:04:00 IST
  • ஒவ்வொரு மாதமும் மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடப்பது வழக்கம்.
  • டிப்ளமோ, கல்லூரி படிப்பு படித்தவர்கள் தங்களுடைய சுயவிவரத்துடன் கலந்து கொண்டு பயனடையலாம்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடப்பது வழக்கம்.

அதன்படி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் எதிரில் உள்ள, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

இதில், கிருஷ்ணகிரி, ஓசூரை சேர்ந்த தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தகுதி உள்ள வேலைதேடுபவர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, கல்லூரி படிப்பு படித்தவர்கள் தங்களுடைய சுயவிவரத்துடன் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News