உள்ளூர் செய்திகள்
நாமக்கல்லில் 17-ந் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்
- தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாதம் தோறும் 3-வது வெள்ளிக்கிழமை நடைபெறும்.
- இந்த மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தனியார் துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பமுள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாதம் தோறும் 3-வது வெள்ளிக்கிழமை நடைபெறும்.
இந்த மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்த முகாம் முற்றிலும் இலவசமானது. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. தகுதியும் விருப்பமும் உள்ளோர் அன்று காலை 10:30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.