உள்ளூர் செய்திகள்

சுரேஷ்

கொடைக்கானலில் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தவருக்கு சிறை

Published On 2022-11-16 09:24 IST   |   Update On 2022-11-16 09:24:00 IST
  • கொடைக்கானலில் ஜே.சி.பி மற்றும் கனரக வாகனங்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
  • அதிகாரிகளை மிரட்டியவருக்கு 5 ஆண்டு சிறைதண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

கொடைக்கானல்:

கொடைக்கானலில் ஜே.சி.பி மற்றும் கனரக வாகனங்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. இந்நிலையில் மேல்மலை கிராமமான கூக்கால் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் அரசு வருவாய் நிலத்தில் அனுமதியின்றி ஜே.சி.பி வாகனம் இயக்கப்பட்டது.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கேட்டபோது வாகனத்தின் டிரைவர் அலட்சியமாக பதில் கூறினார். மேலும் வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியருக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர். இதனைதொடர்ந்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு கொடைக்கானல் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

அதிகாரிகளை மிரட்டிய சுரேஷ் என்பவருக்கு 5 ஆண்டு சிறைதண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார். ஜே.சி.பி டிரைவருக்கு உடந்தையாக இருந்த அன்பழகன், கற்பகநாதனுக்கும் ரூ.10ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News