உள்ளூர் செய்திகள்

தருமபுரி வரத்து குறைவால் சின்ன வெங்காயம் விலை மீண்டும் உயர்வு

Published On 2023-10-21 15:46 IST   |   Update On 2023-10-21 15:46:00 IST
  • தருமபுரியில் வரத்து குறைந்ததால் சின்ன வெங்காயம் விலை மீண்டும் உயர்ந்தது.
  • உழவர் சந்தையில் ரூ. 78 விற்கப்படுகிறது.

தருமபுரி 4 ரோடு அருகே உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மேலும் மொத்த விலை காய்கறி மார்க் கெட்டும் செயல்பட்டு வருகிறது.

இந்த மார்க் கெட்டிற்கு தருமபுரி மாவட்டத்திலுள்ள பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், கம்பைநல்லூர், மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் கிருஷ்ணகிரி, ஓசூர், மற்றும் கர்நாடகா ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் தினசரி மார்க்கெட்டிற்கு வருகிறது.

இங்கிருந்து சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, கேரளா, உள்ளிட்ட பகுதிகளுக்கு காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் தருமபுரி மாவட்டத்தில் சின்ன வெங்காயம் அதிக விளைச்சல் இல்லாததால் வரத்து குறைந்துள்ளது.

இதனால் கர்நாடகா, ஆந்திரா, மற்றும் தமிழ கத்தில் உள்ள பிற மாவட்டங் களில் இருந்து சின்ன வெங்காயம் வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்தது. குறிப்பாக தக்காளி கிலோ ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது.

அதே போல் சின்ன வெங்காயமும் கிலோ ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் இருந்தும் சின்ன வெங்காயம் அதிக அளவில் விற்ப னைக்கு கொண்டு வரப் பட்டது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்திலும் திருச்சி, பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் இருந்தும் சின்ன வெங்காயம் வரத்து வர தொடங்கியதால் விலை குறைந்து 1 கிலோ சின்னவெங்காயம் ரூ.30 வரை விற்பனை ஆனாது.

இந்த நிலையில் சின்ன வெங்காயத்தின் வரத்து தற்போது குறைவாக இருப்ப தால் விலை மீண்டும் அதிக ரிக்க தொடங்கி உள்ளது. அதாவது கடந்த இரண்டு வாரமாக ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ75 -க்கு விற்பனை செய்யப் பட்டது. விலை உயர்வு காரணமாக விற்பனையும் குறைந்து காணப்பட்டது.

தருமபுரி உழவர் சந்தையில் நேற்று சின்ன வெங்காயம் கிலோ ரூ 78-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து அதே விலையில் நீடித்து வருகிறது. இந்த நிலையில் சின்ன வெங்காயம் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டத்திலிருந்து வருவது குறைந்து உள்ளதால், சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிக ரித்து வருகிறது.

இதனால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் ரூ.32-க்கு விற்பனை செய்யப்பட்ட பல்லாரி வெங்கயம் தொடர்ந்து விலையேற்றமாக உள்ளது நேற்று முன்தினம் ரூ. 48க்கும் நேற்று ரூ. 50க்கும் இன்று ரூ. 52க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  

Tags:    

Similar News