உள்ளூர் செய்திகள்

வாழைத்தார்கள் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள காட்சி.

திண்டுக்கல்லில் வாழைத்தார் வரத்து குறைவால் விலை உயர்வு

Published On 2022-06-24 07:23 GMT   |   Update On 2022-06-24 07:23 GMT
  • காற்று வீசியதால் வாழைத்தார் ஒடிந்து சேதம் ஏற்பட்டு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
  • தினசரி தேவையை விட வாழைத்தார்களின் வரத்து குறைவாகவே உள்ளதால் விலை உயர்ந்துள்ளது.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல்லில் வாழைப்பழ தினசரி மார்க்கெட்டில் தேவையை விட வாழைத்தார் வரத்து குறைவால் வாழைப்பழம் விலை உயர்ந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம், ஆத்தூர், கன்னிவாடி மற்றும் கரூர், குளித்தலை, தேனி, சின்னமனூர் ஆகிய பகுதிகளில் ஆண்டு முழுவதும் வாழை சாகுபடி செய்யப்படுகிறது.இந்த ஆண்டு அதிகமாக காற்று வீசியதால் வாழைத்தார் ஒடிந்து சேதம் ஏற்பட்டது. இதனால் வாழைத்தார் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விழாக்காலங்களில் தேவை அதிகமாக இருப்பதால் வாழைப்பழதார்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து வாழைப்பழ வியாபாரிகள் கூறியதாவது,

வாழைத்தார் வரத்து குறைந்ததால் வாழைப்பழங்களின் விலை உயர்ந்துள்ளது.பச்சை வாழைப்பழத்தார் ரூ.500 முதல் ரூ.700 வரைக்கும், கற்பூரவள்ளி, பூவன், ரூ.200 முதல் ரூ.700 வரைக்கும், நாட்டுப்பழம் ரூ.150 முதல் ரூ.600 வரைக்கும் விற்கப்படுகிறது.

சில்லரை விலையில் சிறுமலை வாழைப்பழம், செவ்வாழை ரூ. 12-க்கும், பச்சைப்பழம் ரூ.6-க்கும், கற்பூரவல்லி, பூவன் ரூ 4-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தினசரி தேவையை விட வாழைத்தார்களின் வரத்து குறைவாகவே உள்ளது.அதிக விலை கொடுத்து வாங்குவதால் நாங்களும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறோம் என்றனர்.

Tags:    

Similar News