உள்ளூர் செய்திகள்

பிரீமியர் லீக் கராத்தே போட்டியில் சாதனை படைத்த பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிய போது எடுத்தபடம்

பிரீமியர் லீக் கராத்தே போட்டியில் விளாத்திகுளம் அம்பாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள் சாதனை

Published On 2022-10-20 08:10 GMT   |   Update On 2022-10-20 08:10 GMT
  • பிரீமியர் லீக் கராத்தே போட்டி மதுரை காமராஜர் பல்கலைக்கழக உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
  • தமிழகத்திலிருந்து 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

விளாத்திகுளம்:

பிரீமியர் லீக் கராத்தே போட்டி மதுரை காமராஜர் பல்கலைக்கழக உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

இதில் தமிழகத்திலிருந்து 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியின் தலைமை நடுவராக சோபுக்காய் கோஜு ரியு கராத்தே பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் ரென்ஷி சுரேஷ்குமார் செயல்பட்டார்.

போட்டியில் விளாத்திகுளம் அம்பாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள் கட்டா மற்றும் சண்டை பிரிவில் 17 தங்கப் பதக்கம், 14 வெள்ளி மற்றும் 9 வெங்கலம் என அதிகப்படியான பதக்கத்தையும், வெற்றிக் கோப்பையும் வென்று அசத்தினர்.

வெற்றி பெற்ற மாணவர் களை விளாத்திகுளம் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, பள்ளி தாளாளர் விமராஜ், பள்ளி செயலாளர் சுப்பா ரெட்டியார், பள்ளி இயக்குநர் இந்திரா, ராமராஜு, பள்ளி முதல்வர் ஆபிரகாம் வசந்த், மற்றும் கராத்தே பயிற்சியாளர் சென்சாய் முத்துராஜா, ஆகியோர் பாராட்டினர்.

மேலும் கராத்தே போட்டியில் தங்கம், வெள்ளி வெண்கலம் என அதிகப்படியான பதக்கங் களை பெற்றுசாதனைப் படைத்துள்ள அம்பாள் வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Tags:    

Similar News