உள்ளூர் செய்திகள்

கை கழுவுதல் குறித்து சுகாதார நலக்கல்வி விழிப்புணர்வு குழுவினர் செய்முறை பயிற்சி வழங்கினர்.

நெல்லை அரசு மருத்துவமனையில் கை கழுவல் குறித்த செய்முறை பயிற்சி

Published On 2022-10-15 14:40 IST   |   Update On 2022-10-15 14:40:00 IST
  • உலக சுகாதார நிறுவனம்அக்டோபர் 15-ந் தேதியை உலக கைகழுவும் தினமாக அறிவித்துள்ளது
  • நெல்லை மருத்துவமனையில் உலக கை கழுவும் தினம் நடைபெற்றது.

நெல்லை:

உடல் தூய்மையாகவும், ஆரோக்கியமாகவும் நோயின்றி வாழ முறையாக கைகளை கழுவி பராமரிக்கும் பழக்கத்தை கடைபிடிக்க உலக சுகாதார நிறுவனம் 2008-ம் ஆண்டு முதல் அக்டோபர் 15-ந் தேதியை உலக கைகழுவும் தினமாக அறிவித்துள்ளது.

அதன்படி நெல்லை மருத்துவமனையில் கல்லூரி முதல்வர் டாக்டர் ரவிச்சந்திரன் ஆலோசனைப்படி உலக கை கழுவும் தினம் நடைபெற்றது.

குழந்தைகள் நலப்பிரிவு துறைத்தலைவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். குழந்தைகள் நலப்பேராசிரியர்கள் டாக்டர் ஆனந்தஸ்ரீ, டாக்டர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் கை கழுவும் அவசியம் மற்றும் கை கழுவும் நிலைகள் குறித்து செவிலியர் பயிற்சி பள்ளியின் சுகாதார நலக்கல்வி விழிப்புணர்வு குழுவினர் கை கழுவல் குறித்த செய்முறை பயிற்சி வழங்கினர்.

Tags:    

Similar News