உள்ளூர் செய்திகள்

மஞ்சூரில் மின் சேமிப்பு விழிப்புணர்வு முகாம்

Published On 2022-12-21 14:20 IST   |   Update On 2022-12-21 14:20:00 IST
  • மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் மின் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
  • மின்சாரம் இல்லாவிட்டால் உலகம் இருளில் மூழ்கிவிடும்

மஞ்சூர்,

நீலகிரி மாவட்டம் குந்தா மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் மின் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மஞ்சூர் அரசு மகா கவி பாரதியார் நினைவு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் மின் சேமிப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமிற்கு பள்ளி தலைமையாசிரியர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். இதில் மின் பகிர்மான வட்ட உதவி செயற்பொறியாளர் சிவா கலந்து கொண்டு பேசியதாவது:-

மின்சாரம் என்பது அத்தியாவசிய தேவையாகும். மின்சாரம் இல்லாவிட்டால் உலகம் இருளில் மூழ்கிவிடும். வெளிச்சம் தருவதோடு வீடுகளில் நாம் பயன்படுத்தும் தொலைக்காட்சி பெட்டிகள், மின்விசிறிகள் என 90 சதவீதம் சாதனங்கள் மின்சாரத்தையே சார்ந்துள்ளது. இவ்வாறு அவசிய, அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான மின்சாரத்தை பலர் தேவையற்ற முறையில் உபயோகிப்பதால் மின்சாரம் விரயமாகிறது. தேவையற்ற சமயங்களில் மின்சார விளக்குகள் மற்றும் மின்சார சாதனங்களை உபயோகிப்பதை தவிர்த்தாலே மின்சார விரயத்தை தவிர்த்து அதை சேமிக்க முடியும். இது குறித்து மாணவ சமுதாயத்தினர் பொதுமக்கள் இடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த முன் வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.முகாமில் மின் உதவியாளர் ராமன் மற்றும் ஆசிரியைகள் சர்மிளா, பாபி மற்றும் மாணவிகள் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News