உள்ளூர் செய்திகள்

பெரிய கோம்பைபுதூர் பகுதியில் கொல்லிமலை பழங்குடியின பெண்கள், பொங்கல் வைத்து கும்மி பாட்டுடன் நடனமாடிய காட்சி.

கும்மி பாட்டு, ஆட்டத்துடன் பொங்கல் கொண்டாடிய பழங்குடியின மக்கள்

Published On 2023-01-16 14:47 IST   |   Update On 2023-01-16 14:47:00 IST
  • கொல்லி மலை பழங்குடியின மக்கள், தங்கள் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பொங்கல் விழாவை கொண்டாடினர்.
  • விழாவையொட்டி வீடு களில் வண்ண கோல மிட்டு, கரும்பு, மஞ்சள் தோரணங்கள் கட்டி, பாரம்பரிய ஆண்டி குலத்தான் ஆட்டம், பாரம்பரிய கொல்லிமலை கும்மி பாட்டுடன் பெண்கள் நடனம் ஆடினர்.

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பெரிய கோம்பைபுதூர் பகுதியில் வசிக்கும் கொல்லி மலை பழங்குடியின மக்கள், தங்கள் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பொங்கல் விழாவை கொண்டாடினர்.

பெண்கள் புத்தாடை அணிந்தும், புதுப்பானையில் பொங்கல் வைத்தும், சிறப்பு பூஜைகள் செய்தும் சூரியனை வழிபட்டனர். விழாவையொட்டி வீடு களில் வண்ண கோல மிட்டு, கரும்பு, மஞ்சள் தோரணங்கள் கட்டி, பாரம்பரிய ஆண்டி குலத்தான் ஆட்டம், பாரம்பரிய கொல்லிமலை கும்மி பாட்டுடன் பெண்கள் நடனம் ஆடினர்.

அப்போது அவர்கள் பொங்கலோ பொங்கல் என கோஷமிட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News