உள்ளூர் செய்திகள்
வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
- தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையை சேர்ந்தவர் மேகலா.
- பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த, 7 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையை சேர்ந்தவர் மேகலா (வயது 23). இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு காலை தனது தாய் வீடான வெத்தலகாரன்பள்ளத்திற்கு சென்றுள்ளார்.
பின், நேற்று காலை வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த, 7 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இந்த திருட்டு குறித்து, மேகலா அதியமான் கோட்டை போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.