போலீசார் ஹெல்மெட் சோதனையில் ஈடுபட்ட காட்சி.
சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் போலீசார் ஹெல்மெட் சோதனை
- ஹெல்மெட் சோதனையில் ஈடுபடுமாறு போலீசாருக்கு உத்தரவு
- இந்த பகுதியில் அதிக அளவில் பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் உள்ளன.
சேலம்:
சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா மற்றும் துணை கமிஷனர்கள் மாடசாமி, லாவண்யா ஆகியோர், அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஹெல்மெட் சோதனையில் ஈடுபடுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளனர்.
அதன்படி, இன்று காலை சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில், அஸ்தம்பட்டி போலீசார் 10-க்கும் மேற்பட்டோர் நின்று, ஹெல்மெட் சோதனையில் ஈடுபட்டனர். இந்த பகுதியில் அதிக அளவில் பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் இருப்பதால் காலை நேரத்தில் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் போலீசார் அதிக அளவில் நிற்பதை கண்டு பொதுமக்கள் பீதியுடன் சென்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, இந்த பகுதியில் பள்ளிகள் அதிகளவில் உள்ளது. குழந்தைகளை காலையில் அவசரமாக பள்ளிக்கு அழைத்து வரும் நேரத்தில், போலீசார் தடுத்து நிறுத்தி ஹெல்மெட் பரிசோதனை என்ற பெயரில் மிரட்டுகின்றனர். இதனால் பள்ளிக்கு செல்வதற்கு தாமதமாகிறது. எனவே காலை நேரத்தில் ஹெல்மெட் சோதனை செய்வதை தவிர்க்க வேண்டும் என்றனர்.