உள்ளூர் செய்திகள்

தென்பெண்ணையாற்றில் பேரிடர் கால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களை படத்தில் காணலாம்.


போச்சம்பள்ளி தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் கால பாதுகாப்பு ஒத்திகை

Published On 2023-09-04 08:56 GMT   |   Update On 2023-09-04 08:57 GMT
  • பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
  • ஆற்றில் தவறிவிழந்தவர்களையும், நீரில் அடித்து செல்பவர்களையும் எவ்வாறு மீட்டெடுப்பது குறித்தான மாதிரி ஒத்திகை பயிற்சியும் செயல்முறை விளக்கமும் செய்து காண்பித்தனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம். போச்சம்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் பேரிடம் மீட்பு வெள்ள தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. கனமழை, வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பருவ மழை பேரிடர் காலங்களில் ஆறு, ஏரிகுளம், அணை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வரஉள்ள வட கிழக்கு பருவமழையின்போது வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு பாதுகாப்புடன் மீட்பது என்பது குறித்து தத்ரூபாமாக தீயணைப்பு மற்றும் பணி வீரர்கள் விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்தனர். இந்நிலையில் தற்போது தொடர் மழையின் காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் போச்சமபள்ளி அருகில் உள்ள மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றுக்கு புனித நீராட குடும்பத்துடன்  வருகிறார்கள். இதனை வைத்து போச்சம்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்பு அலுவலர் சக்திவேல் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் தவறிவிழந்தவர்களையும், நீரில் அடித்து செல்பவர்களையும் எவ்வாறு மீட்டெடுப்பது குறித்தான மாதிரி ஒத்திகை பயிற்சியும் செயல்முறை விளக்கமும் செய்து காண்பித்தனர். இதனால் ஆற்றுக்கு புனித நீராட வந்த பக்தர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.

Tags:    

Similar News