உள்ளூர் செய்திகள்

ஓசூரில் பா.ம.க. உழவர் பேரியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2022-11-15 15:36 IST   |   Update On 2022-11-15 15:36:00 IST
  • பா.ம.க. உழவர் பேரியக்கம் சார்பில், ஓசூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • பா.ம.க.தொண்டர்கள், மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ம.க. உழவர் பேரியக்கம் சார்பில், ஓசூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் ராம் நகர் அண்ணா சிலையருகே நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்ராஜன் தலைமை தாங்கினார்.

மாவட்ட அமைப்பு செயலாளர் விசுவநாதன், துணை செயலாளர் வெங்க டேஷ் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தர்மபுரி எம்.எல்.ஏ. எஸ்.பி. வெங்கடேஸ்வரன், தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, செயலாளர் இல.வேலுச்சாமி ஆகி யோர் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்க உரையாற்றி னார்கள்.

இதில், பா.ம.க. மாநில துணைத்தலைவர் தா.தேவராஜன், பா.ம.க. வக்கீல்கள் சமூக நீதி பேரவை தகவல், தொழில்நுட்ப துறையின் மாநில தலைவர் கனல் கதிரவன் மற்றும் மாநில மாவட்ட, நகர பா.ம.க. நிர்வாகிகள், உழவர் பேரியக்க நிர்வாகிகள், பா.ம.க.தொண்டர்கள், மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, சேட்டிலைட் டவுன் ரிங் ரோடு திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் மத்திய, மாநில அரசு, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் ஆர்ப்பாட்டத்தில் பேசிய தர்மபுரி எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன், இது சம்பந்தமாக சட்டமன்றத்தில் குரல் எழுப்புவதாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார்.

Tags:    

Similar News