பிரதமர் ேமாடி பிறந்தநாளையொட்டி மருத்துவ முகாம் நடைபெற்றது.
கொடைக்கானலில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழா
- கொடைக்கானலில் பிரதமர் நரேந்திர மோடியின் 72 வது பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
- பா.ஜனதா சார்பில் மூஞ்சிக்கல் பகுதியில் பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் பிரதமர் நரேந்திர மோடியின் 72 வது பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
நகரத் தலைவர் சதீஷ்குமரன் தலைமையில் மாநில,மாவட்ட, நகர நிர்வாகிகள், இளைஞர் அணியினர் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு கவி தியாகராஜர் சாலை பகுதியில் பா.ஜனதா கொடியை ஏற்றி வைத்தனர்.
அதன் பின்னர் கொடைக்கானல் பெரிய மாரியம்மன் கோவிலில் மோடியின் பிறந்த நாளுக்காக சிறப்பு பூஜை செய்தனர்.
அதன்பின் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.மாவட்ட மருத்துவர் அணி தலைவர் டாக்டர் ஸ்ரீகலா தலைமையில் மூஞ்சிக்கல் பகுதியில் பொது மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது.
மருத்துவர் அணி மாவட்டச்செயலாளர் டாக்டர். விக்னேஸ்வரன் மற்றும் உதவியாளர்கள் சிகிச்சை அளித்தனர்.இந்நிகழ்வில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனர்.இதனிடையே குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் அன்னதானமும் பா.ஜனதா சார்பில் வழங்கப்பட்டது.
இதில் ஓ. பி. சி மாநிலச்செயலாளர் அண்ணாதுரை, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன்,மாவட்டத் துணைத்தலைவர் டாக்டர். மதன்குமார்,முன்னாள் நகரத் தலைவர் மணி,நகரத் தலைவர் சதீஷ்குமரன்,நகர பொதுச்செயலாளர்கள் கணேசன், சரவணன், நகரப்பொருளாளர் ரமேஷ், இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் வார்டு நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.