உள்ளூர் செய்திகள்

வயிற்று வலியால் பிளஸ்-2 மாணவி தற்கொலை

Published On 2023-03-13 15:33 IST   |   Update On 2023-03-13 15:33:00 IST
  • இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
  • வீட்டில் யாரும் இல்லாத போது அஸ்வினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அருகே மிட்டாப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். இவரது மகள் அஸ்வினி. அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்- 2 படித்து வந்தார். இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது அஸ்வினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News