உள்ளூர் செய்திகள்

பேரணி தொடங்கியபோது எடுத்த படம்.

சிவசக்தி வித்யாலயா பள்ளி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Published On 2023-07-04 08:44 GMT   |   Update On 2023-07-04 08:44 GMT
  • பிளாஸ்டிக்கை தொடர்ந்து பயன்படுத்துவது மண்ணிற்கு கேடானது.
  • பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

தென்காசி:

பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையனுர் பொடியனூர் சிவசக்தி வித்யாலயா சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ. பள்ளி சார்பாக உலக பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.

பேரணியை ஆவுடையானூர் பஞ்சாயத்து தலைவர் குத்தாலிங்க ராஜன் என்ற கோபி தொடங்கி வைத்து பேசும் போது, பிளாஸ்டிக்கை வீட்டிலேயே பிரித்து எடுப் பது எளிதானது. அவற்றை தொடர்ந்து பயன்படுத்துவது மண்ணிற்கு கேடானது. பிளாஸ்டிக் பொருட்களை முறையாக பிரித்து எடுத்து அப்புறப்படுத்துவதில் ஆவுடையானூர் ஊராட்சி முன்மாதிரியாக செயல்பட்டு வருகிறது என்றார்.

முன்னதாக மாணவி செல்வமாரி வரவேற்று பேசினார். மாணவி ஜெய்ஸ்ரீ, கமலஸ்ரீ ஆகியோர் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து பேசினர். பேரணியானது ஆவுடையானூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் தொடங்கி மாடியனூர் வழியாக சென்றது. பேரணியின் போது பிளாஸ்டிக் ஒழிப்பு வாசகங்களை கூறியபடி மாணவர்கள் சென்றனர். மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. பேரணி ஏற்பாடுகளையும் பள்ளி முதல்வர் நித்யா தினகரன் மற்றும் அனைத்து துறை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News