உள்ளூர் செய்திகள்

டேலியா ரக நாற்றுகளை குழித்தட்டுகளில் வைத்து பராமரிக்கும் பணி நடைபெற்றது.


கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர்கண்காட்சிக்காக 5000 டேலியா ரக நாற்றுகள் நடவு

Published On 2022-12-01 11:41 IST   |   Update On 2022-12-01 12:39:00 IST
  • கோடை காலத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவர்களை கவரும் விதமாக கோடைவிழா மலர்கண்காட்சி நடைபெற்று வருகிறது.
  • கொல்கத்தாவில் இருந்து சுமார் 5000 டேலியாரக நாற்றுகளை குழிதட்டுகளில் வைத்து பராமரிக்கும் பணி தொடங்கியுள்ளது.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக கோடை காலத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவர்களை கவரும் விதமாக கோடைவிழா மலர்கண்காட்சி நடைபெற்று வருகிறது.

கொரோனா ஊரடங்குக்கு பிறகு மலர்கண்காட்சியை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மே மாதத்தில் நடைபெறும் மலர் கண்காட்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படும் பூக்கள் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. மேலும் உலக அதிசயம், தலைவர்களின் படங்கள், வண்ண ஓவியங்கள், மயில் உள்ளிட்ட பறவைகளின் உருவங்களை வண்ணமலர்களை கொண்டு வடிவமைத்து வருகின்றனர்.

இதற்காக தற்போதே நாற்றுகள் நடும் பணி தொடங்கியுள்ளது. இதனை தோட்டக்கலைத்துறையினர் நட்டு பராமரித்து வருகின்றனர்.

கொல்கத்தாவில் இருந்து சுமார் 5000 டேலியாரக நாற்றுகளை குழிதட்டுகளில் வைத்து பராமரிக்கும் பணி தொடங்கியுள்ளது. 30 நாட்களில் வீரிய நாற்றாக மாறியபின்னர் அங்கிருந்து பிரித்தெடுத்து படுகைகளில் நடவு செய்யும் பணி நடைபெறும். அதனைெதாடர்ந்து ேகாடைசீசனில் செடிகளில் வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கும். மேலும் பல செடிகளை நடவு செய்ய முடிவு செய்துள்ளதாக பூங்கா அலுவலர் சிவபாலன் தெரிவித்தார்.

Tags:    

Similar News