ஸ்ரீ மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
- நிப்பான்-எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தின் மூலம் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.
- 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ந்தெடுத்து பணி நியமன ஆணையை வழங்கினார்கள்.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே உள்ள மாதம்பட்டி ஸ்ரீ மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஓசூர்- இந்தியா நிப்பான்-எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தின் மூலம் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.
இதில் கல்லூரியின் தலைவர் கோவிந்தராஜ் தலைமை உரையாற்றினார். பொருளாளர் ராஜாக் கவுண்டர் மற்றும் செயல் இயக்குனர் மாதுளம் பூ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கல்லூரியின் முதல்வர் கந்தசாமி வரவேற்று பேசினார். இந்தியா நிப்பான் எலெக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அலுவலர்கள் சரவணன் உதவி மேலாளர் லட்சுமிபதி மற்றும் அலுவலர்கள் ஆகியோர் மாணவர்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தியும் சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ந்தெடுத்து பணி நியமன ஆணையை வழங்கினார்கள்.
இம்முகாம் ஏற்பாடு களை அனைத்து துறை தலைவர்கள் மற்றும் ஆசிரியை பெருமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந் தார்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட பணி நியமனம் பெற்ற அனைத்து மாணவர்களையும் இக்கல்லூரியின் தலைவர் கோவிந்தராஜ் மற்றும் இயக்குனர்களும் வெகுவாக பாராட்டினார்கள் இம்முகாமின் முடிவில் மின்னனுவியல் துறை தலைவர் தேவன் நன்றியுரை வழங்கினார்.