உள்ளூர் செய்திகள்

பிடமனேரி ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்திருப்பதை படத்தில் காணலாம்.

2 நாட்களாக பெய்த கனமழையால் நிறைந்த பிடமனேரி ஏரி

Published On 2023-09-02 15:28 IST   |   Update On 2023-09-02 15:28:00 IST
  • வெளியேறும் உபரி நீரால் 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள நெல் பயிர் சேதமானது.
  • கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் தருமபுரி மாவட்டத்தில் பெரும்பா–லான ஏரி, குளங்கள் நிறைந்து வருகின்றன.

இந்நிலையில் தருமபுரி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிடமனேரி ஏரியில் 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏரி நிறைந்து உபரி நீர் வெளியேறி வருகிறது.

இதேபோல் கடந்த கடந்த காலங்களில் பெய்த மழை–யால் ஏரி நிறைந்து ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் கால்வாய் ஆக்கிரமிப்–பால் விவசாய நிலங்க–ளுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் நாசமானது.

மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பெயரில் வட்டார வளர்ச்சி அலுவ–லர்கள் உபரி நீர் வெளியே–றுவதற்கு கால்வாய் அமைத்தனர். மேலும் உபரி நீர் கால்வாயை சிமெண்ட் கால்வாயாக மாற்றி அமைக்க விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளா–ததால் உபரி நீர் கால்வாய்–கள் மண் சரிந்து ஆங்காங்கே மழை நீர் செல்வதற்கு வழியின்றி தடைபட்டுள்ள–தால் மழை நீரானது தற்போது பிடமனேரி பகுதி–யில் உள்ள விவசாய நிலங்க–ளில் புகுந்து பயிர்கள் நாசமாகி உள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகள் தொழிற்சாலை–களுக்குள்–ளும் மழை நீர் புகுந்துள்ளது.

மேலும் ஏரியிலிருந்து ஜிலேபி, கட்லா, ரோகு, பொட்லா, உள்ளிட்ட பல வகையான மீன்கள் ஏரியின் உபரி நீர் செல்லும் ஏரிகோடி வழியாக வெளியேறி வயல்களில் புகுந்ததால் 2 நாட்களாக பொதுமக்கள் ½ கிலோ முதல் 4 கிலோ எடையுள்ள மீன்களை பிடித்து வருகின்றனர்.

இதுகுறித்து இலக்கியம்–பட்டி பஞ்சா–யத்து பிடம–னேரி பகுதியில் உள்ள 4-வது வார்டு கவுன்சிலர் மற்றும் விவசாயிகள் கூறும்போது:-

தருமபுரி கடந்த2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் 40 ஏக்கர் பரப்பளவில் உள்ள பிடமனேரி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து ஏரி நிறைந்தது. இதில் இருந்து 2 நாட்களாக உபரி நீர் ஏரிக்கோடி வழியாக வெளி–யேறி வருகிறது. கடந்த 3 வருடங்களுக்கு முன்பு வட்டார வளர்ச்சி அலு–வலர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் தற்காலிகமாக ஆக்கிர–மிப்புகளை அகற்றி கால்வாயை தூர்வாரி உபரிநீர் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டது.

இந்த கால்வாய் வழியாக ஏரியின் உபரி நீர் நிரந்த–ரமாக வெளியேறுவதற்கு கால் வாயை சிமெண்ட் கால்வாயாக மாற்றி அமைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடமும் மனு கொடுத்து முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிடமனேரி ஏரிக்கு கீழ்பகுதியில் 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் ஏக்கருக்கு 40,000 செலவு செய்து நெல் பயிர் நடவு செய்துள்ளனர். தற்பொழுது ஏரியிலிருந்து வெளியேறும் உபரினரால் நெற்பயிர்கள் தண்ணீர் நிறைந்து நாசமாகி உள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக உபரி நீர் செல்லு கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் விவசாயிகளுக்கு இழப்பீடாக நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Tags:    

Similar News