உள்ளூர் செய்திகள்

நாகூர் தர்காவை தூய்மையாக வைத்திருக்க யாத்ரீகர்களுக்கு வேண்டுகோள்

Published On 2022-12-27 06:50 GMT   |   Update On 2022-12-27 06:50 GMT
  • தர்காவில் வழங்கப்படும் அன்னதான உணவுகளை வீணடிக்க கூடாது.
  • பிரார்த்தனை செய்யும் இடங்களில் பிறருக்கு இடையூறாக புகைப்படம், வீடியோ எடுக்க கூடாது.

நாகப்பட்டினம்:

நாகூர் தர்கா போர்ட் ஆப் டிரஸ்டிகள் சார்பாக தர்கா மானேஜிங் டிரஸ்டி டாக்டர் செய்யது காமில் சாஹிப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப–தாவது:-

நாகூர் தர்காவுக்கு வரும் யாத்ரீகர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். முடிந்தவரை தனி மனித இடைவெளி கடைப்பிடித்து முக கவசம் அணிய வேண்டும்.

குப்பை தொட்டிகளில் குப்பைகளை போடுங்கள். தங்களது காலணிகளை தர்கா உள்ளே எடுத்து செல்லாதீர்கள். தர்கா கழிவறைகளை பயன்படுத்தினால் சுத்தம் செய்துவிட்டு செல்லுங்கள். குடிநீரை வீண் விரயம் செய்யாதீர்கள்.

தர்காவில் வழங்கப்படும் அன்னதான உணவுகளை வீணடிக்க கூடாது.தர்கா குளத்தில் உணவு பொருட்களை, குப்பை களை போடக்கூடாது. பிரார்த்தனை செய்யும் இடங்களில் பிறருக்கு இடையுறாக புகைப்படம், வீடியோ எடுக்க கூடாது.

தர்காவில் பொது இடங்களில் ஏதேனும் சந்தேகத்துக்கிடமான பொருட்கள் கண்டால் தர்கா அலுவலகத்தில் தெரியபடுத்தவும்.

தங்களது உடைகளை தாங்களே பார்த்து கொள்ளுங்கள். ஒரு வேளை உடைமைகள் பொருட்கள் தொலைந்தால் தர்கா அலுவலகம் முன் அமைந்துள்ள தொண்டர் படையை உடனே தொடர்பு கொள்ளுங்கள்.

அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். உங்களது குறை நிறைகளை மானேஜிங் டிரஸ்டி, நாகூர் தர்கா, நாகூர்-611002 என்ற முகவரிக்கு எழுத்து பூர்வமாக தெரியுங்கள்.

அவரச குறை நிறைகளை வாட்சப் மூலமாக தர்கா மானேஜிங் டிரஸ்டிக்கு 96774-10786, 98424-41404 அனுப்பவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News