உள்ளூர் செய்திகள்
பிக்பாக்கெட் அடித்த வாலிபர் கைது
- கணேசனிடம் பிக்பாக்கெட் அடித்து பர்சில் இருந்த ரூ.500யை பறித்து சென்றார்.
- கோகுல்நாத் (23) என்பவர் பிக்பாக்கெட் அடித்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கோபாலகிருஷ்ணன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது23). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் கணேசனிடம் பிக்பாக்கெட் அடித்து பர்சில் இருந்த ரூ.500யை பறித்து சென்றார். உடனே அந்த மர்மநபரை கணேசன் பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த கோகுல்நாத் (23) என்பவர் பிக்பாக்கெட் அடித்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.