உள்ளூர் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்த கலெக்டரிடம் மனு

Published On 2022-08-29 10:18 GMT   |   Update On 2022-08-29 10:18 GMT
  • பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுவதால் ேநாய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
  • மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும்.

நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் நெல்லை மண்டல செயலாளர் அப்துல் ஜப்பார் தலைமையில் மாவட்டச் செயலாளர் ஜமால், நிர்வாகிகள் உமர் பாரூக், நயினார், சுலைமான் மற்றும் பலர் வந்து அளித்த மனுவில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் நெல்லை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு மஞ்சப்பை திட்டத்தை அறிமுகப்படுத்திய பின்னரும் அதனை நடைமுறைக்கு கொண்டு வராமல் தொடர்ந்து பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறது.

அதனை தயாரிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆங்காங்கே பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கபடுவதால் ேநாய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறியிருந்தனர்.

மானூர் யூனியன் கானார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மெர்சி பிரேம்குமார் தலைமையில் ஊர்மக்கள் அளித்த மனுவில், தங்களது கிராமத்தில் தனியார் பஸ்கள் நின்று செல்வதில்லை.

இதனால் மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரி செல்லமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக பல ஆண்டுகளாக போராடி வருகிறோம் என கூறியிருந்தனர்.

Tags:    

Similar News