உள்ளூர் செய்திகள்
கலெக்டரிடம் மனு அளிக்க வந்த கிராம மக்கள்.
இலவச மின்சாரம் பயன்படுத்த மின்வாரிய ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக கலெக்டரிடம் மனு
இலவச மின்சாரத்தை பயன்படுத்த வேண்டுமேயானால் மின்சார கணக்கீட்டாளர் மற்றும் உதவி பொறியாளருக்கு பணம் தர வேண்டும் என மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் நாகல்நகர், பாரதிபுரம், வேடப்பட்டி பகுதிகளில் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 200 யூனிட் வரை உள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து இலவச மின்சாரத்தை பயன்படுத்த வேண்டுமேயானால் மின்சார கணக்கீட்டாளர் மற்றும் உதவி பொறியாளருக்கு பணம் தர வேண்டும் என மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது.
திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரத்தை சேர்ந்த நெசவாளர் மக்கள் 20க்கும் மேற்பட்டோர் பணம் கேட்டு மிரட்டும் மின்சார ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.