முகாமில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது.
ஒட்டன்சத்திரத்தில் வருவாய்த்துறை சார்பில் கோரிக்கை மனு முகாம்
- ஒட்டன்சத்திரம் நகராட்சியில் அனைத்து வார்டுகள் அளவிலான மக்களின் கோரிக்கை மனு பெறும் முகாம் நடைபெற்றது.
- சில மனுக்களின் மீதான தன்மையை பொறுத்து உடனடியாக முகாமில் தீர்வு காணப்பட்டது.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் நகராட்சியில் அனைத்து வார்டுகள் அளவிலான மக்களின் கோரிக்கை மனு பெறும் முகாம் நகர்மன்ற தலைவர் திருமலைசாமி தலைமையில் நடைபெற்றது. நகர்மன்ற துணைத் தலைவர்வெள்ளைச்சாமி, நகராட்சி ஆணையாளர் தேவிகா, வட்டாட்சியர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இம் முகாமில் வட்ட வழங்கல் அலுவலர் பிரசன்னா, அனைத்து நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி மேலாளர் உமாகாந்தி, தலைமை கணக்காளர் சரவணகுமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முகாமில் வீட்டுமனை பட்டா வீடு பராமரிப்பு, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு, நிலம் வழங்க, கால்நடைகள் வளர்க்க, உள்ளிட்ட, கோரிக்கைகளை மனு மூலமாக வட்டாட்சியர் தலைமையிலான குழுவினரிடம் கிராம பொதுமக்கள் கொடுத்தனர். அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளரை கொண்டு சில மனுக்களின் மீதான தன்மையை பொறுத்து உடனடியாக முகாமில் தீர்வு காணப்பட்டது.