உள்ளூர் செய்திகள்

நாகை மாவட்ட காங்கிரஸ் தலைவர் அமிர்தராஜ் தாயார் படத்திறப்பு விழா நடந்தது.

மேகதாதுவில் அணைகட்ட அனுமதி கொடுக்க கூடாது - திருமாவளவன் பேட்டி

Published On 2022-06-21 08:12 GMT   |   Update On 2022-06-21 08:12 GMT
  • ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க சுதந்திரமாக எந்த செயலும் செய்ய முடியவில்லை.
  • காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக் கூடாது.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அமிர்தராஜின் தாயாரின் படத்திறப்பு விழா கீழ்வேளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. படத்திறப்பு விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் திருமாவளவன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க சுதந்திரமாக எந்த செயலும் செய்ய முடியவில்லை. கடந்த 4 ஆண்டுகள் ஆட்சி காலத்தில் இருந்த அ.தி.மு.க, பா.ஜ.க.வின் முழு கட்டுப்பாட்டில் இருந்தது. இதனை அ.தி.மு.க. தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக் கூடாது. இதுவரை கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர்கள் குடியரசுத் தலைவராக முடியாத நிலையில், இந்த முறை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளராக ஒரு கிறிஸ்தவரை நிறுத்த வேண்டும்.இந்தியாவில் மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. பா.ஜ.க.வை தனிமைப்படுத்தி எழுதுவதை நோக்கமாக கொண்டு ஒரே அணியை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News