உள்ளூர் செய்திகள்

பழுதாகியுள்ள பெரிய குளம் சுற்றுச்சுவர்.

திருமருகல் பெரியகுளம் படிக்கட்டுகள் சுவர் சீரமைக்கப்படுமா?

Published On 2023-03-02 09:21 GMT   |   Update On 2023-03-02 09:21 GMT
  • நாட்டார்மங்கலம் கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பெரியக்குளம் உள்ளது.
  • குளத்தில் உள்ள மூன்று படிக்கட்டுகளும் இடிந்து கால் வைத்தால் குளத்திற்குள் விழும் அபாய நிலையில் உள்ளது.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி நாட்டார்மங்கலம் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பெரியக்குளம் உள்ளது.

இந்த குளத்தை அப்பகுதி பொதுமக்கள் குளிப்பதற்கு மற்றும் பல்வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் கோடை காலங்களில் முக்கிய நீர்நிலை ஆதாரமாகவும் உள்ளது.

இந்த நிலையில் குளத்தில் உள்ள மூன்று படிக்கட்டுகளும் இடிந்து கால் வைத்தால் குளத்திற்குள் விழும் அபாய நிலையில் உள்ளது.

வயது முதிர்ந்தவர்கள் இறங்கும் போது படிகட்டுகள் இடிந்து விழுந்து காயமடைகின்றனர்.

மேலும் அருகில் நூலகம், கிராம நிர்வாக அலுவலகம் உள்ளிட்டவை அமைந்துள்ளதால் அங்கு வருபவர்கள் குளத்திற்கு செல்லும் போது தவறுதலாக எதேனும் உயிர் சேதம் ஏற்படும் நிலையில் உள்ளது.

மேலும் சாலையோரம் உள்ள தடுப்பு சுவர்கள் முழுவதும் சேதமடைந்து காணப்படுகிறது.

இதனால் இரவு நேரங்களில் அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்கள் ஏதேனும் ஏற்படுமோ என்ற அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

இதனை பற்றி பலமுறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடன் நடவடிக்கை மேற்கொண்டு பெரியகுளத்தை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News