உள்ளூர் செய்திகள்

ெபரம்பலூரில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க வலியுறுத்தல்

Published On 2023-04-10 13:11 IST   |   Update On 2023-04-10 13:11:00 IST
  • தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
  • 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட கோரிக்கை

பெரம்பலூர்,

தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மருதமுத்து, மாவட்ட பொருளாளர் ஆதிசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் கோசிபா, ஓய்வு பெற்ற அலுவலர்களின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். கூட்டத்தில், 70 வயதான ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியத்தை அனுமதித்து வழங்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் மற்றும் ஈட்டிய விடுப்பு ஊதியத்தை உடனடியாக வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும். கடந்த 13 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை திட்டத்தை தொடங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வரும் ஆய்வகத்தை, புதிய கட்டிடத்துக்கு மாற்ற அரியலூர் மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு 1.1.2023 முதல் 4 சதவீத அகவிலைப் படியை நிலுவையுடன் வழங்கியது போல, தமிழக அரசும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தலைமை நிலைய செயலாளர் மணி வரவேற்றார். முடிவில் மகளிரணி தலைவி வசந்தா நன்றி கூறினார்.

Tags:    

Similar News