உள்ளூர் செய்திகள்

தூய்மை பணியாளர்கள் குப்பைத் தொட்டிகளை தோளில் சுமக்கும் அவலம்

Published On 2022-07-08 12:32 IST   |   Update On 2022-07-08 12:32:00 IST
  • தூய்மை பணியாளர்கள் குப்பைத் தொட்டிகளை தோளில் சுமக்கும் அவல நிலையாக உள்ளது.
  • வாகனங்களை பழுது நீக்கி தர வேண்டும்

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் தெரணி கிராமத்தில் 9 வார்டுகள் உள்ளன. இங்கு நாள்தோறும் தூய்மை பணியாளர்கள் மூன்று சக்கர தள்ளும் வாகனம் மூலம் காலையில் வீடு தோறும் குப்பைகளை வாங்குவது வழக்கம். தற்பொழுது குப்பை கொண்டு செல்லும் வண்டி பழுதடைந்த நிலையில் உள்ளதால் தூய்மை பணியாளர்கள் தினமும் அதிகாலை நேரங்களில் குப்பை தொட்டியை தோளில் சுமந்து வீடுதோறும் சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.

மேலும் அவர்கள் கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் அணியாமல் குப்பைகளை அள்ளுவதால் நோய் தொற்று ஏற்படும் அவல நிலை உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் பழுதடைந்த வாகனங்களை சீரமைத்து, தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News