உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் லாரி கவிழ்ந்து விபத்து

Published On 2023-08-05 13:52 IST   |   Update On 2023-08-05 13:52:00 IST
  • பெரம்பலூரில் லாரி மோதியதில் மற்றொரு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
  • நெடுஞ்சாலை ரோந்து போலீசார் லாரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்

பெரம்பலூர்,

பெரம்பலூர் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே செங்குணம் பிரிவு சாலையில் நேற்று மதியம் வந்த சிமெண்டு கலவை எந்திரம் லாரி நெடுஞ்சாலையை திருச்சி நோக்கி திரும்பியது. அப்போது அந்த லாரி மீது பின்னால் கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராப்பாளையத்தில் சிமெண்டு மூட்டைகளை இறக்கி விட்டு, அரியலூரை நோக்கி வந்த லாரி மோதியது. இதில் சிமெண்டு கலவை லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதன்மீது மோதிய லாரியின் முன்புறம் சேதமடைந்தது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து லாரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். இந்த விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News