வாக்கு எந்திரங்கள் மத்திய காப்பறைக்கு மாற்றி சீல் வைப்பு
- மத்திய காப்பறைக்கு வாக்கு எந்திரங்கள் மாற்றி சீல் வைக்கப்பட்டது.
- கலெக்டர் முன்னணியில் நடைபெற்றது
பெரம்பலூர்:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021- இன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரு சட்டமன்ற தொகுதிக்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள காப்பறையிலும் 148. குன்னம் சட்டமன்ற தொகுதிக்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மத்திய காப்பறையிலும் வைத்து சீலிடப்பட்டிருந்தது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக காப்பறையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மத்திய காப்பறைக்கு மாற்றிடவும், பழுதடைந்துள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை பெங்களுரில் உள்ள பெல் நிறுவனத்திற்கு அனுப்பிடுவதற்காகவும்
பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள காப்பறை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட கலெக்டர் முன்னிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்பாக திறக்கப்பட்டது.
அதன் பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மத்திய காப்பறையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்பாக திறக்கப்பட்டு பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக காப்பறையிலிருந்து கொண்டு வரப்பட்ட மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்கள் மத்திய காப்பறையில் வைத்து மாவட்ட கலெக்டர் முன்னிலையில் சீலிடப்பட்டது.