உள்ளூர் செய்திகள்
பெரம்பலூரில் ஆயுதப்படை காவலர்களுக்கு பயிற்சி
- ஆயுதப்படை மைதானத்தில் கவாத்து பயிற்சி அளிக்கப்பட்டது
- பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ச. சியாம்ளா தேவி உத்தரவின்படி, மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் ஆயுதப்படை காவலர்களுக்கு பெரம்பலூர் தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் கவாத்து பயிற்சி அளிக்கப்பட்டது. ஆயுதப்படை துணைக் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த கவாத்து பயிற்சியில், காவலர்களுக்கு உடல்பயிற்சி, லத்தி பயிற்சி, துப்பாக்கிகளை கையாளும் ஆயுதப்பயிற்சி, கும்பலை கலைக்கும் பயிற்சி, கலவரத்தை கையாளும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் தங்கம் மற்றும் ஆயுதப்படை சார்பு ஆய்வாளர்கள், ஆயுதப்படை காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ச. சியாம்ளா தேவி உத்தரவின்படி, மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் ஆயுதப்படை காவலர்களுக்கு பெரம்பலூர் தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் கவாத்து பயிற்சி அளிக்கப்பட்டது. ஆயுதப்படை துணைக் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த கவாத்து பயிற்சியில், காவலர்களுக்கு உடல்பயிற்சி, லத்தி பயிற்சி, துப்பாக்கிகளை கையாளும் ஆயுதப்பயிற்சி, கும்பலை கலைக்கும் பயிற்சி, கலவரத்தை கையாளும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் தங்கம் மற்றும் ஆயுதப்படை சார்பு ஆய்வாளர்கள், ஆயுதப்படை காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.