அரசு பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி
- அரசு பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கபட்டது
- இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 113 முதுகலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து முதுகலை ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டு பயிற்சியை நடத்தியது. பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த முதுகலை ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தலைமை ஆசிரியர் முத்துசாமி தலைமை வகித்தார். மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சீரங்கன் முன்னிலை வகித்தார்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் தேவகி பயிற்சியை தொடங்கி வைத்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மயில்வாகனன் ஆகியோர் பயிற்சியை பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினர். இதில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் உடல்நலம் பதின்ம பருவத்திற்கான மனவெழுச்சி நலன் மற்றும் ஆசிரியர் மாணவர் மனவெழுச்சி நலன் மேம்பாடு மற்றும் வாழ்வியல் திறன் மேம்பாடு ஆகிய தலைப்புகளின் கீழ் பயிற்சி வழங்கப்பட்டது.
ஆசிரியர்கள் ராமமூர்த்தி, இந்திராகாந்தி, பரமசிவம், ஜான்ராபிசன், விர்ஜின்சோபியா, ரேவதி, ரவீந்திரன், கோவிந்தராஜூ மற்றும் ரஞ்சித்குமார் ஆகியர் கருத்தாளர்களாக இருந்து பயிற்சி அளித்தனர். இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 113 முதுகலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பயிற்சிக்காக ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளையராஜா, வட்டார ஒருங்கிணைப்பாளர் கலைவாணன் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் செய்திருந்தனர்.