உள்ளூர் செய்திகள்
- தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார்.
- குழந்தை இல்லாத ஏக்கத்தில் நடந்த சம்பவம்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அனுக்கூர் காலனி தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி மீனா (வயது 28). இந்த தம்பதிக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. மீனா வி.களத்தூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். மீனா நேற்று மாலை வீட்டில் இருந்த போது திடீரென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குழந்தை இல்லாத ஏக்கத்தில் மீனா தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.