பெரம்பலூர் எஸ்.பி. அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர் முகாம்
- காவல்துறை சார்பில் வாரந்தோறும் புதன் கிழமை மக்கள் குறைதீர் நாள் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
- குறை தீர்க்கும் முகாமில் 19 மனுக்கள் பெறப்பட்டு மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிடப்பட்டது.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் முகாம் நடந்தது.
காவல்துறை சார்பில் வாரந்தோறும் புதன் கிழமை மக்கள் குறைதீர் நாள் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் எஸ்பி அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு எஸ்பி மணி தலைமை வகித்து மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார்.
இதில் 19 மனுக்கள் பெறப்பட்டு மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிடப்பட்டது. முகாமில் ஏடிஎஸ்பி மதியழகன் மற்றும் அனைத்து போலீஸ்ஸ்டேசன் இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்று வருகிறது. இதனை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என எஸ்பி மணி தெரிவித்தார்.