உள்ளூர் செய்திகள்

பூலாம்பாடியில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள 3-ம் கட்ட நிதியாக ரூ.27 லட்சம் வழங்கப்பட்டது

Published On 2023-04-11 12:51 IST   |   Update On 2023-04-11 12:51:00 IST
  • தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார் வழங்கினார்
  • மொத்தம் ரூ.11 கோடி வழங்கப்பட உள்ளது

அரும்பாவூர்,

பூலாம்பாடி பேருராட்சி பகுதிகளில் அடிப்படை வசதி செய்து தருமாறு பன்னாட்டு தொழிலதிபரும் மண்ணின் மைந்தருமான டத்தோ எஸ்.பிரகதீஸ்குமாரிடம் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.அதன்படி பொதுமக்களின் சிரமங்களை கேட்டறிந்த அவர், பொதுமக்கள் பங்களிப்பு தொகையுடன் நமக்குநாமே திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகள் செய்து தர ஏற்பாடு செய்தார். அதற்கான முயற்சிகளை முழுவீச்சில் செய்த டத்தோ எஸ்.பிரகதீஸ்குமார் அரசு அதிகாரிகளிடம் கூறி பூலாம்பாடி பேரூராட்சியில் அனைத்து வீதிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கண்டறியசொல்லி அதற்கான செலவினங்களையும் கேட்டறிந்தார்.

இதனை செய்து முடித்தால் பூலாம்பாடி பேரூராட்சி அடிப்படை வசதிகளில் தன்னிறைவு பெறும் என்பதால், அடிப்படை வசதிகளை நமக்குநாமே திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.33 கோடி மதிப்பீட்டில் செய்து தர முடிவு செய்யப்பட்டது. டத்தோ எஸ்.பிரகதீஸ்குமார் சார்பில் ப்ளஸ்மேக்ஸ் ஹெல்த்கேர் பவுண்டேசன் சார்பில் ரூ.11 கோடி பங்களிப்பு தொகையாக தரப்படஉள்ளது. அதன் மூலம்

பூலாம்பாடி பேரூராட்சியில் சாலைவசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கழிவுநீர் கால்வாய், உயர்மட்ட பாலம் அமைத்தல், குடிநீர் கிணறு அமைத்தல் பணிகள் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக தொழிலதிபர் டத்தோ எஸ்.பிரகதீஸ்குமார் பங்களிப்பு தொகையாக அவரது ப்ளஸ்மேக்ஸ் ஹெல்த் கேர் பவுண்டேசன் சார்பில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ந்தேதி முதற்கட்ட நிதியாக ரூ.90 லட்சத்திற்கான வரைவோலையையும், அக்டோபர் 28-ந்தேதி இரண்டாம் கட்டநிதியாக ரூ.74லட்சத்து 8 ஆயிரத்துக்கான வரைவோலையையும் வழங்கியிருந்தார்.இந்தநிலையில் நேற்று (10.04.2023) மூன்றாம் கட்டநிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் டத்தோ எஸ்.பிரகதீஸ்குமார், ரூ.26லட்சத்து 98 ஆயிரத்துக்கான வரைவோலையைபூலாம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் சிவராமனிடம் வழங்கினார். பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி செங்குட்டுவன், கவுன்சிலர்கள் பூங்கொடி மணி, மாணிக்கம், ராமதாஸ், ராஜலட்சுமி செல்வக்குமார், கஸ்தூரி வீராசாமி, பரகத்நிஷா அப்துல்ரஹீம், சுதாகர், ஜெயந்தி பெருமாள், செல்வராணி ராமர் தொழிலதிபர்கள் மணிகவுண்டர்,இசைபாலு, மண்மணி, பூலாம்பாடி சதிஷ், மணி, செங்குட்டுவன் மற்றும் பூலாம்பாடி டத்தோ இளைஞர் நற்பணி மன்றத்தினர் கிராம பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News