உள்ளூர் செய்திகள்

நிறுத்தப்பட்ட நகர பேருந்து சேவையை தொடர கோரிக்கை

Published On 2022-09-05 15:26 IST   |   Update On 2022-09-05 15:26:00 IST
  • நிறுத்தப்பட்ட நகர பேருந்து சேவையை தொடர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
  • கடந்த 2 வருடங்களாக நிறுத்தப்பட்டிருந்தது

பெரம்பலூர்:

திருச்சி மாவட்டம், துறையூரில் இருந்து பெரம்பலூர் மாவட்டம் நக்கசேலம், செட்டிகுளம், நாட்டார்மங்கலம் வழியாக ஆலத்தூர்கேட் வரை இயக்கப்படும் ஒரு அரசு டவுன் பஸ் தினமும் காலை, மதியம், இரவு ஆகிய நேரத்தில் 6 முறை இயக்கப்பட்டு வந்தது. இந்த அரசு டவுன் பஸ்சில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பலரும் சென்று வந்தனர்.

ஆலத்தூர்கேட்டிலிருந்து துறையூருக்கு இரவும், துறையூரிலிருந்து அதிகாலை ஆலத்தூர்கேட்டிற்கும் இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ் நிறுத்தப்பட்டதால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இரவு நேரத்தில் பயணிகள் பலரும் ஆலத்தூர் கேட்டில் இருந்து ஆட்டோ போன்ற வாகனங்களில் அதிக கட்டணம் செலுத்தி பயணம் மேற்கொள்கின்றனர்.

கடந்த 2 வருடங்களாக நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் நலன் கருதி பஸ்சை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News