உள்ளூர் செய்திகள்
பெரியவடகரை கிராமத்தில் ஆக்கிரமிப்பு கோயில் நிலம் மீட்பு
- பெரியவடகரை கிராமத்தில் ஆக்கிரமிப்பு கோயில் நிலம் மீட்கப்பட்டது
- கோவில் நிலங்களை மீட்டுத்தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பெரியவடகரை கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறையை சேர்ந்த அய்யனார் கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தை தனிநபர் சிலர் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கோவில் நிலங்களை மீட்டுத்தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்பேரில் உதவி ஆணையர் லெட்சுமணன் உத்தரவின் பேரில் இந்து சமய அறநிலையத்துறை தனி தாசில்தார் (கோவில் நிலம்) பிரகாசம் தலைமையில் சர்வேயர் கண்ணதாசன், வக்கீல், விஏஒ மற்றும் கோயில் பணியாளர்கள் கொண்ட குழுவினர் சென்று கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளந்து மீட்டனர். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.