உள்ளூர் செய்திகள்

புதுமை மாதா கோவில் ஆண்டுப்பெருவிழா

Published On 2023-08-14 12:25 IST   |   Update On 2023-08-14 12:25:00 IST
அம்மாபாளையத்தில் புனித புதுமை மாதா கோவில் ஆண்டுப்பெரு விழா சப்பர பவனி

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே அம்மாபாளையம் கிராமத்தில் புனித புதுமை மாதா கோவில் ஆண்டு பெரு விழா சப்பர பவனி நேற்றுநடந்தது.அம்மாபாளையம் கிராமத்தில் புனித புதுமை மாதா கோவில் ஆண்டு பெரு விழாவையொட்டி நேற்று காலை 8மணியளவில் திருவிழா சப்பர பவனி நடந்தது. பாளையம் புனித சூசையப்பர் தேவாலயப் பங்கு குரு ஜெயராஜ் ஜெபம்செய்து சப்பரத்தை மந்திரித்த பிறகு, அம்மாபாளையம் ஊராட்சி தலைவர் பிச்சைபிள்ளை, பாளையம் பங்குகுரு ஜெயராஜ்ஆகியோர் சப்பர பவனியை கூட்டாக தொடங்கி வைத்தனர். இந்த சப்பர பவனி அம்மாபாளையம் கிராமத்தின் முக்கியவீதிகளில் பவனியாக வந்து, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு பங்கு குருஜெயராஜ் தலைமையில் சிறப்புப் பாடல் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து ஆராதனையும், அன்னதானமும் நடந்தது.இதில் பாளையம், அம்மாபாளையம், குரும்பலூர், பெரம்பலூர், புதுநடுவலூர், சத்திர மனை, ரெங்கநாதபுரம் உள்ளிட்டப்பல்வேறு கிராமங்களை சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News